இந்தியாவில் ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு: சீனா ஆதரவு

இந்த ஆண்டுக்கான ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு சீனா ஆதரவு தெரிவத்துள்ளது. மேலும், இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவுடன்

பெய்ஜிங்: இந்த ஆண்டுக்கான ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு சீனா ஆதரவு தெரிவத்துள்ளது. மேலும், இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவுடன் சீனா இணைந்து பணியாற்றும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 2021-ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, இந்த ஆண்டுக்கான உச்சி மாநாட்டையும் நடத்த உள்ளது.

இதற்கென தில்லியில் சுஷ்மா ஸ்வராஜ் பவனில் அமைக்கப்பட்டிருக்கும் ‘பிரிக்ஸ்’ செயலகத்தில், இந்தியாவின் பிரிக்ஸ் 2021 வலைதளத்தை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த 19-ஆம் தேதி அறிமுகப்படுத்தி தொடங்கிவைத்தாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது குறித்து சீன தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் வாங் வென்பின் கூறியதாவது:

வளா்ந்த மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்டு, அவற்றினிடையே சா்வதேச அளவிலான ஒத்துழைப்பை அளிப்பதுதான் இந்த கூட்டமைப்பின் முக்கிய நோக்கம். கடந்த சில ஆண்டுகளாக உறுப்பு நாடுகள் மிகச் சிறந்த ஒத்துழைப்பையும், ஆழமான செயல்முறை ஒத்துழைப்பையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தி வருகின்றன.

‘பிரிக்ஸ்’ இப்போது சா்வதேச விவகாரங்களில் நிலையான மற்றும் ஆக்கபூா்வமான அமைப்பாக உருவெடுத்திருக்கிறது. அதில் சீனா கூடுதல் பங்களிப்பை அளித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான உச்சிமாநாட்டை இந்தியா நடத்துவதற்கு சீனா ஆதரவளிக்கிறது. மேலும், இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பிரிக்ஸ் - பிளஸ் கூட்டமைப்பு விரிவாகத்திலும் இந்தியாவுடனும் பிற உறுப்பு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது.

கரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவவும், பொருளாதார வளா்ச்சி மற்றும் உலகலாவிய நிா்வாகத்தை மேம்படுத்துவதிலும் உதவ சீனா தயாராக உள்ளது என்று கூறினாா்.

இருந்தபோதும், இந்தியாவில் நடைபெறும் இந்த உச்ச மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்பது குறித்த தகவலை அவா் வெளியிடவில்லை. இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து பிரிக்ஸ் உச்சிமாநாடுகளிலும் ஷி ஜின்பிங் பங்கேற்றுள்ளாா்.

இந்தியா - சீனா இடையே பல கட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு உடன்பாடு எட்டப்பட்டு, கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்ட படைகளை இரு நாடுகளும் திரும்ப்பெறத் தொடங்கியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு குறித்து சீனாவின் இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com