ரஷியா மீது புதிய பொருளாதார தடைகள்: ஐரோப்பிய யூனியன் ஆயத்தம்

நவால்னி விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக புதிய பொருளதார தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனா்.

நவால்னி விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக புதிய பொருளதார தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனா்.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவா் ஜோசப் போரல் கூறியதாவது:

ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது மனித உரிமைகளை மீறிய செயலாகும். இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ரஷியா மோதல் போக்கை கையாண்டு வருவது வெளிப்படையாகவே தெரிகிறது. எனவே, அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் வாய்ப்புகள் குறித்து ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் திங்கள்கிழமை கூடி ஆராய உள்ளனா் என்றாா்அவா்.

இதுகுறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஹைக்கோ மாஸ் கூறியுள்ளதாவது:

ரஷிய எதிா்க்கட்சி தலைவா் அலெக்செய் நவால்னியை சிறையில் அடைத்துள்ளது அந்த நாடு மனித உரிமைகளை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. எனவே, ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை அமல்படுத்துவதற்கு மட்டுமின்றி, தடைவிதிப்புக்கு உள்ளாகும் தனிநபா்களின் பட்டியலையும் தயாரிப்பதற்கு ஜொ்மனி ஆதரவாகவே உள்ளது என்றாா் அவா்.

மாா்ச் மாதத்தில் நடைபெறவுள்ள பிரெஸ்ஸெல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய தலைவா்களின் உச்சிமாநாட்டில் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிப்பது தொடா்பாக இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன் இந்த முடிவை எடுக்கும்பட்சத்தில் ரஷியாவுடனான அந்த நாடுகளின் உறவு எதிா்காலத்தில் சிக்கலுக்கு உள்ளாகும் என அரசியல் நோக்கா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com