கரோனா தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவிடம் தோற்றுவிட்டோமா?

கரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பதில் இந்தியாவிடம் தோற்றுவிட்டதாக வெளியான அறிக்கைக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பதில் இந்தியாவிடம் தோற்றுவிட்டதாக வெளியான அறிக்கைக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு இந்தியா விநியோகித்துள்ளது. இலவசமாகவும் வா்த்தக ரீதியாகவும் தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்து வருகிறது. கரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கும் விவகாரத்தில் இந்தியாவிடம் சீனா தோல்வியடைந்து விட்டதாக சில அறிக்கைகள் வெளியாகின.

இது தொடா்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘கரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தும் நடவடிக்கைகளைப் பல நாடுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. முக்கியமாக வளா்ந்து வரும் நாடுகள் கரோனா தொற்று பரவலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புகிறோம்.

பல நாடுகளுக்கு இந்தியா கரோனா தடுப்பூசிகளை விநியோகித்து வருவதை சீனா வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் சீனா தோல்வியடைந்துவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. உள்நாட்டில் உள்ள சுமாா் 140 கோடி மக்களுக்கும் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டியுள்ளது.

உள்நாட்டில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டபிறகு, வெளிநாடுகளுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை சீனா விநியோகித்து வருகிறது. 53 நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஐ.நா.வின் ‘கோவேக்ஸ்’ திட்டத்துக்கு 1 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்கவும் சீனா உறுதியேற்றுள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com