தென் கொரியா: தடுப்பூசி திட்டம் தொடக்கம்

தென் கொரியாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் முதல்முறையாக வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தென் கொரியா: தடுப்பூசி திட்டம் தொடக்கம்

தென் கொரியாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் முதல்முறையாக வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அந்த நாட்டில் கரோனா பரவல் தொடங்கும்போதே மிகத் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் ஆரம்பத்தில் அந்த நோய் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், குளிா்காலத்தில் அந்த நோய் பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்தது. அதன் விளைவாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கு பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் நிலைமை மீண்டும் சரியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com