கருக்கலைப்பிற்கு சட்டப்பூர்வ அனுமதியளித்தது ஆர்ஜென்டினா

நீண்ட போராட்டத்திற்குப் பின் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் சூழலில் கருக்கலைப்பு மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ அனுமதியை ஆர்ஜென்டினா அரசு  வழங்கியுள்ளது.
கருக்கலைப்பிற்கு சட்டப்பூர்வ அனுமதியளித்தது ஆர்ஜென்டினா
கருக்கலைப்பிற்கு சட்டப்பூர்வ அனுமதியளித்தது ஆர்ஜென்டினா

நீண்ட போராட்டத்திற்குப் பின் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் சூழலில் கருக்கலைப்பு மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ அனுமதியை ஆர்ஜென்டினா அரசு  வழங்கியுள்ளது.

லத்தீன் அமெரிக்கா, டொமினிகன் குடியரசு மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் கருக்கலைப்புகளை மேற்கொள்ள தடை இருந்து வருகிறது. கருக்கலைப்புகளை மேற்கொள்வது சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்ட நிலையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன.

கருக்கலைப்பிற்கு சட்டப்பூர்வ அனுமதி கோரி பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை கருக்கலைப்பிற்கு சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதாவிற்கு ஆர்ஜென்டினா அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தின் முன் கூடிய கருக்கலைப்பு ஆதரவாளர்கள் பச்சை வண்ணக் கைக்குட்டைகளுடன் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

அம்னஸ்டி இன்டர்நேஷனல் அர்ஜென்டினாவின் நிர்வாக இயக்குநரும், உலகளாவிய பெண்கள் உரிமை இயக்கத்தின் தூதருமான மரியெலா பெல்ஸ்கி, “ஆர்ஜென்டினா பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆர்ஜென்டினா பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்கலைப்புகளுக்கு மட்டுமே தற்போது அனுமதியளித்துள்ளது. அதன்படி மற்ற அனைத்து சூழ்நிலைகளிலும், கருக்கலைப்பு சட்டவிரோதமானதாகக் கருதப்பட்டு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com