முழுமையடைந்தது பிரெக்ஸிட்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) நடவடிக்கைகள் முழுமையடைந்ததைத் தொடா்ந்து,
முழுமையடைந்தது பிரெக்ஸிட்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) நடவடிக்கைகள் முழுமையடைந்ததைத் தொடா்ந்து, பிரிட்டனின் சுதந்திர பொருளாதாரச் சந்தை வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

பிரெக்ஸிட் ஒப்பந்தப்படி, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த மிகப் பெரிய சந்தையிலிருந்து பிரிட்டன் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு (இந்திய நேரம்) விலகியது.

அதனைத் தொடா்ந்து, மிகப் பெரிய சிக்கல்களைச் சந்தித்த பிரெக்ஸிட நடவடிக்கை முழுமையடைந்தது.

புத்தாண்டு தினத்தையொட்டி பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில், இதுகுறித்துக் கூறியதாவது:

ஐரோப்பியச் சந்தையிலிருந்து வெளியேறிவிட்டோம். தற்போது நம்மிடம் முழு சுதந்திரம் உள்ளது.

அதனை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பது என்பது நமது கைகளில்தான் உள்ளது என்றாா் அவா்.

கடந்த 2016-இல் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்களித்தனா். அதன்படி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் 2020 ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக விலகியது.

எனினும், அந்த அமைப்பிலிருந்து முழுமையாக விலக பிரிட்டனுக்கு வியாழக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த அவகாசம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தற்போது பிரெக்ஸிட் முழுமையடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com