
பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான அவதூறுக் கருத்துகளை எதிா்க்கட்சியினா் கூறினால், அவா்கள் மீது 72 மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அநத நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் அகமது எச்சரித்துள்ளாா்.
ராணுவத்தின் கைப்பாவையாக பிரதமா் இம்ரான் கான் செயல்பட்டு வருவதாகவும் தோ்தலில் முறைகேடு செய்து அவா் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளாதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இம்ரானுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள 11 எதிா்க்கட்சிகள் அடங்கிய பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், பாகிஸ்தான் ராணுவத்தையும் அரசியல் நடவடிக்கைகளின் அதன் தலையீடு குறித்தும் கடுமையாக விமா்சித்து வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர ரஷீத் கூறியதாவது:
ராணுவ அமைப்புகளுக்கு எதிராக அவதூறுக் கருத்துகளைக் கூறுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு எதிராக 72 மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா் அவா்.