கரோனா தடுப்பூசி உற்பத்தி: பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் பாராட்டு

இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி உற்பத்தி: பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் பாராட்டு

இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
 இது குறித்து விஞ்ஞானிகள் கூட்டம் ஒன்றில் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்தியாவில் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்தார். கரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் புதுமை கண்டுபிடிப்பு, தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது; இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத் திறன் மனிதகுலம் முழுவதற்கும் உதவுவதாக அமையும் எனவும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.
 இது குறித்த செய்தியை உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் சூழலில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி பெருமை அளிப்பதாக உள்ளது; இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன் என பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.
 உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரஸ் அதனோம் கெப்ரெயேஸஸ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவு: கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக, இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுத்து வருகிறது. நாம் இணைந்து செயல்பட்டால், அனைவருக்கும் பாதுகாப்பான தடுப்பூசியைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com