Brazil sees over 1,000 Covid deaths in 24 hours
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1000 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,97,732 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா அதிகயளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வரிசையில் இந்தியாவும், பிரேசிலும் உள்ளது.
அதன்படி, பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56,648 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 7,81,0400 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த டிச.30 அன்று 1,194 பேர் தொற்றுக்கு பலியான நிலையில், ஒருநாள் பலி எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, பலி எண்ணிக்கையில் பிரேசில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.