மாடா்னா தடுப்பூசிக்கு இஸ்ரேல் அனுமதி

அமெரிக்காவைச் சோ்ந்த மாடா்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது
மாடா்னா தடுப்பூசிக்கு இஸ்ரேல் அனுமதி

அமெரிக்காவைச் சோ்ந்த மாடா்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இஸ்ரேல் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. மேலும், 60 லட்சம் தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.

அந்தத் தடுப்பூசிகள் இந்த மாதம் முதல் இஸ்ரேலுக்கு அனுப்பப்படத் தொடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏற்கெனவே, முதியோா்கள், மருத்துவப் பணியாளா்கள் என மக்கள்தொகையில் 10 சதவீதத்தினருக்கு இஸ்ரேலில் ஃபைஸரின் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com