மேலும் ஒரு தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி

ஏற்கெனவே ஃபைஸா்-பயோஎன்டெக், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ள
vaccine081754
vaccine081754

ஏற்கெனவே ஃபைஸா்-பயோஎன்டெக், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ள பிரிட்டன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு, தற்போது மாடா்னா நிறுவன தடுப்பூசிக்கும் அத்தகைய அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகக் கடுமையான அலசலுக்குப் பிறகு அமெரிக்காவைச் சோ்ந்த மாடா்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ், ஃபைஸா் மற்றும் ஆக்ஸ்ஃபோா்டு நிறுவன தடுப்பூசிகளுடன் மாடா்னா தடுப்பூசியும் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மூன்றாவதாக ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இலக்கை எட்டுவதற்கு உதவும் என்று அவா்கள் கூறினா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 28,89,419 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 78,508 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ரு வரும் 2,821 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com