அமெரிக்க உயிரியல் பூங்காவில் 8 கொரில்லாக்களுக்கு கரோனா

அமெரிக்காவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஏராளமான கொரில்லா குரங்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க உயிரியல் பூங்காவில் 8 கொரில்லாக்களுக்கு கரோனா
அமெரிக்க உயிரியல் பூங்காவில் 8 கொரில்லாக்களுக்கு கரோனா


சான் டியாகோ: அமெரிக்காவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஏராளமான கொரில்லா குரங்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உயிரியல் பூங்காவின் செயல் இயக்குநர் லிசா பீட்டர்சன் இது குறித்து செய்தி ஊடகத்திடம் பேசுகையில், இதுவரை 8 கொரில்லா குரங்குகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில குரங்குகளும் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உயிரியல் பூங்கா டிசம்பர் 6-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து கொரில்லா குரங்குகளை கவனித்து வருகின்றனர். வழக்கமான உணவுகளுடன் சத்து மாத்திரைகள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. சளி மற்றும் இருமல் தவிர இந்த கொரில்லா குரங்குகளுக்கு வேறு எந்த உடல் நலப் பிரச்னையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com