
இந்தோனேசிய நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரட்டை நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசிய நாட்டில் உள்ள ஜாவா மாகாணத்தின் சிஹான்ஹுவாங்கில் கடந்த சனிக்கிழமை கனமழை பெய்தது. இந்த கனமழையால் அப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலர் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 16ஆக உயர்ந்தது. மேலும் நிலச்சரிவில் காணாமல் போன 23 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.