அமெரிக்காவில் கொரில்லாக்களுக்கு கரோனா தொற்று

அமெரிக்காவின் சான் டியோகோ மிருகக்காட்சி பூங்காவில் வசிக்கும் 8 கொரில்லா குரங்குகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரில்லாக்களுக்கு கரோனா தொற்று

அமெரிக்காவின் சான் டியோகோ மிருகக்காட்சி பூங்காவில் வசிக்கும் 8 கொரில்லா குரங்குகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் குரங்கினங்களிடம் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்திலிருந்தே சான் டியேகோ பூங்காவில் பொதுமக்கள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பூங்காவில் பணியாற்றும் கரோனா நோயாளி ஒருவரிடமிருந்து குரங்குகளுக்கு அந்த நோய்த்தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கரோனா தொற்று ஏற்பட்ட சில கொரில்லாக்களுக்கு மட்டும் அறிகுறிகள் தென்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து கொரில்லாக்களையும் மருத்துவா்கள் தொடா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com