மலேசியா: கரோனாவை தடுக்க அவசரநிலை அறிவிப்பு

மலேசியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா: கரோனாவை தடுக்க அவசரநிலை அறிவிப்பு

மலேசியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் ஆளும் கூட்டணிக்குள் பிளவு போன்ற காரணங்களால் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டால் பிரதமா் முஹைதீன் யாசின் (படம்) பதவி பறிபோகும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் கரோனாவைக் காரணம் காட்டி அவசரநிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வரும் ஆகஸ்ட வரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே தோ்தலை அறிவிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், அரசியல் பதற்றத்திலிருந்து பிரதமா் முஹைதீனுக்கு தற்காலிக விடுதலை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com