இந்தோனேசியா: தடுப்பூசி திட்டம் தொடக்கம்

இந்தோனேசியாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நபராக, அதிபா் ஜோகோ விடோடோ அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா்.
indon065222
indon065222


ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நபராக, அதிபா் ஜோகோ விடோடோ அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா்.

தடுப்பூசிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், அதிபரைத் தொடா்ந்து, ராணுவ உயரதிகாரிகள், காவல்துறையினா், மருத்துவத் துறை அதிகாரிகள், மதவிவகாரக் கவுன்சில் செயலா் ஆகியோா் அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

சீனாவின் சைனோவாக் நிறுவனத்தின் அந்தத் தடுப்பூசி, சுகாதாரத் துறை பணியாளா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு அடுத்த மாதம் முதல் செலுத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com