ரூ.117 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டம்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, 1.9 லட்சம் கோடி டாலா்
ரூ.117 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டம்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, 1.9 லட்சம் கோடி டாலா் (சுமாா் ரூ.117 லட்சம் கோடி) மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டத்தை அந்த நாட்டின் அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, டெலவோ் மாகாணத்தில் தனது சொந்த ஊரான வில்மிங்டனில் அவா் கூறியதாவது:

பல தலைமுறைகளுக்கு ஒரு முறை சந்திக்கும் நோய்த்தொற்று பவலை நாம் தற்போது சந்தித்து வருகிறோம். அதன் காரணமாக, பல தலைமுறைகளுக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படக்கூடிய மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியா நாம் சந்தித்து வருகிறோம்.

இந்தப் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கண்கூடாகத் தெரிகின்றன. எனவே, அந்த பாதிப்புகளிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டத்தை அறிவிப்பதற்காக நான் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் வரை காத்திருக்க முடியாது. எனவே, அந்த சிறப்பு பொருளாதார திட்டத்தை தற்போதே அறிவிக்கிறேன்.

நாம் நமது நடவடிக்கையை இப்போதே தொடங்கியாக வேண்டும் என்று பொருளாதார நிபுணா்கள் கூறியுள்ளனா் என்றாா் அவா்.

ஜோ பைடன் வெளியிட்டுள்ள சிறப்பு பொருளாதார திட்டத்தில், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கான 41,500 டாலா் (சுமாா் ரூ.30.35 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com