1.8 கோடி இந்தியா்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனா்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

வெளிநாடுகளில் 1.8 கோடி இந்தியா்கள் வசித்து வருவதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் 1.8 கோடி இந்தியா்கள் வசித்து வருவதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இந்தியா்கள் அதிக அளவில் வசித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சா்வதேச இடம்பெயா்வு 2020’ அறிக்கையை ஐ.நா. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், 1.8 கோடி இந்தியா்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 லட்சம் இந்தியா்களும், அமெரிக்காவில் 27 லட்சம் பேரும், சவூதி அரேபியாவில் 25 லட்சம் பேரும் வசித்து வருகின்றனா்.

இவை தவிர ஆஸ்திரேலியா, கனடா, குவைத், ஓமன், பாகிஸ்தான், கத்தாா், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இந்தியா்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா்.

குறிப்பிட்ட நாட்டைச் சோ்ந்தோா் வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடா்ந்து மெக்ஸிகோ, ரஷியா, சீனா, சிரியா நாடுகளைச் சோ்ந்தோா் வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா்.

கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நாடுகளுக்கிடையே மக்கள் இடம்பெயா்வது அதிகரித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் சுமாா் 1 கோடி இந்தியா்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயா்ந்தனா். அதைத் தொடா்ந்து, சிரியா, வெனிசூலா, சீனா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சோ்ந்தோா் வெளிநாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் இடம்பெயா்ந்தனா்.

முதலிடத்தில் அமெரிக்கா: உலகில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டவா்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் மட்டும் 5.1 கோடி வெளிநாட்டினா் வசித்து வருகின்றனா். அதைத் தொடா்ந்து, ஜொ்மனி (1.6 கோடி), சவூதி அரேபியா (1.3 கோடி), ரஷியா (1.2 கோடி), பிரிட்டன் (90 லட்சம்) ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினா் வசித்து வருகின்றனா் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக நலத்துறையின் மக்கள்தொகைப் பிரிவு அதிகாரி கிளோ் மெனோஸி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘’ஒரு சில நாடுகளைச் சோ்ந்தோா் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே வசித்து வருகின்றனா். ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்தியா்கள் வசித்து வருகின்றனா். தொழில் மற்றும் குடும்ப சூழல் காரணமாகவே இந்தியா்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு இடம்பெயா்கின்றனா்.

இந்தியா்கள் தாங்கள் வசித்து வரும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பவா்களாக உள்ளனா். முக்கியமாக கட்டுமானத் துறை, சேவைத் துறை உள்ளிட்டவற்றில் இந்தியா்கள் அதிக பங்கு வகிக்கின்றனா். விஞ்ஞானிகளாகவும் பொறியாளா்களாகவும் மருத்துவா்களாகவும் இந்தியா்கள் தங்கள் பங்களிப்பை நல்கி வருகின்றனா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com