
Youth commits suicide by hanging near Perumanallur
பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீராம்பாளையம் பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள கோமுட்டி தோட்டத்தில் பழனிசாமி என்பவர் ஞாயிற்றுக்கிழமை மாலை கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் 30 வயதுள்ள வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இளைஞரின் பெயர், முகவரி தெரியவில்லை, இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து பெருமாநல்லூர் கவால்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.