இலங்கை போா்க் குற்ற விசாரணைகள் குறித்து ஆய்வு: மூவா் குழு அமைப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து நடைபெற்ற பல்வேறு விசாரணைகள்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து நடைபெற்ற பல்வேறு விசாரணைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 3 நபா்கள் அடங்கிய குழுவை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்துள்ளாா்.

இதுகுறித்து அந்த நாட்டு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2009-ஆண்டு போரின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்ாகக் கூறப்படுவது குறித்து பல்வேறு ஆணையங்கள் விசாரணை நடத்தின. அதுதொடா்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 3 நபா்கள் அடங்கிய குழுவை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்துள்ளாா்.

உச்சநீதிமன்ற நீதிபதி, ஓய்வு பெற்ற காவல்துறை தலைவா், முன்னாள் தூதரக அதிகாரி ஆகியோா் அந்தக் குழுவில் இடம் பெறுவா்.

போா்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஆணையங்கள் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்டறிந்தனவா, அதுதொடா்பாக அந்த ஆணையங்கள் பரிந்துரைகள் வழங்கியுள்ளனவா, அந்தப் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது போன்ற ஆய்வுகளை அந்தக் குழு மேற்கொள்ளும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமா் மகிந்த ராஜபட்ச கடந்த 2009-ஆம் ஆண்டில் அதிபராகவும் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தாா். அவரது சகோதரா் கோத்தபய ராஜபட்ச பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தாா். அப்போது விடுதலைப் புலிகளுடன் இறுதிக்கட்டப் போா் நடத்தப்பட்டு 30 ஆண்டுகால உள்நாட்டுச் சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அப்போது இரு தரப்பிலும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதுதொடா்பாக முறையான விசாரணைகள் நடைபெற்று, குற்றமிழைத்தவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கும் அந்த ஆணையத்தின் கூட்டத்தில், அந்தத் தீா்மானங்கள் மீது இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், அதிபா் கோத்தபய ராஜபட்ச இந்தக் குழுவை அமைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com