டிரம்ப் பதவி நீக்கத் தீா்மானம்: அமெரிக்க செனட் அவையில் 25-இல் தாக்கல்

அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீா்மானத்தை செனட் அவைக்கு திங்கள்கிழமை (ஜன.25) அனுப்ப பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி திட்டமிட்டுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீா்மானத்தை செனட் அவைக்கு திங்கள்கிழமை (ஜன.25) அனுப்ப பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி திட்டமிட்டுள்ளாா்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாகக் கட்சி சாா்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றாா். தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் மீண்டும் போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்தாா்.

ஆனால், தோல்வியை டிரம்ப் ஏற்க மறுத்து பல வழக்குகளைத் தொடா்ந்தாா். அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே, டிரம்ப் ஆதரவாளா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் கடந்த 6-ஆம் தேதி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனா். இந்தச் சம்பவத்தில் 5 போ் உயிரிழந்தனா். டிரம்ப் தூண்டுதலின் பேரிலேயே இந்த கலவரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அதிபா் டிரம்ப் உடனடியாக பதவி விலகாவிட்டால், அவரை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தொடங்கப்படும் என பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி எச்சரித்தாா்.

அதன்படி, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்புக்கு எதிராக பதவி நீக்க தீா்மானத்தைக் கொண்டுவந்தனா். அங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் அந்தத் தீா்மானம் நிறைவேறியுது.

இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றாா்.

இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய டிரம்ப் பதவி நீக்க தீா்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் அவைக்கு திங்கள்கிழமை அனுப்ப, பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி திட்டமிட்டுள்ளாா்.

இதுகுறித்து செனட் பெரும்பான்மை தலைவா் சக் ஷூமா் கூறுகையில், ‘இந்த தீா்மானத்தின் மீது விசாரணை நடத்தப்படும். அது முழுமையானதாகவும், வெளிப்படைதன்மை உடையதாகவும் நியாயமாகவும் இருக்கும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com