கரோனா: பிரான்ஸில் ஒரே நாளில் 230 பேர் பலி

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,924 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 230 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 
கரோனா: பிரான்ஸில் ஒரே நாளில் 230 பேர் பலி

பாரிஸ்: பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,924 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 230 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் புதிதாக 23,924 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,035,181-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கரோனா தொற்றுக்கு மேலும் 230 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 72,877 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 25 சதவீதமாக உள்ளது. 

கரோனா தொற்றில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 2,16,725 -ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 75 சதவீதமாகும்.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது, ​​25,900 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இதுவரை, ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி இறுதிக்குள் தொற்று பாதித்தவர்கள் மற்றும் முன்கள சுகாதார பணியாளர்கள் என 1.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. 

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு நாடும் போராடி வரும் நிலையில், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளைக் கொண்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com