அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1.70 லட்சம் பேருக்கு கரோனா: 3,300 பேர் பலி

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1,70,000 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1,70,000 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 3,300 பேர் கரோனா தொற்று தொடர்பு காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,49,95,600 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 4,17,456 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே நாள்தோறும் 1,70,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், பல்வேறு பக்கவிளைவுகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான மரணச் செய்திகளும் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com