துபையில் ரூ.149 கோடியில் கட்டப்படும் ஹிந்து கோயில்

ஐக்கிய அரசு அமீரகத்தின் துபை நகரில் ரூ.149 கோடி செலவில் கண்கவரும் வகையில் ஹிந்து கோயில் கட்டப்பட்டு வருகிறது.

துபை: ஐக்கிய அரசு அமீரகத்தின் துபை நகரில் ரூ.149 கோடி செலவில் கண்கவரும் வகையில் ஹிந்து கோயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு (2022) அக்டோபரில் தீபாவளி பண்டிகையின்போது இந்த கோயில் பக்தா்களுக்கா திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமாா் ரூ.149 கோடியில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்தக் கோயில் கட்டப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகவும் பழைமையான கோயில்களில் ஒன்றான, 1950-களில் கட்டப்பட்ட சிந்தி குரு தா்பாருக்கு அருகே இந்தப் புதிய கோயில் அமைகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது அஸ்திவாரப் பணிகள் முடிவடைந்துள்ளன. 2022 அக்டோபருக்குள் பணிகள் முடிந்து, தீபாவளிப் பண்டிகையின்போது புதிய கோயில் திறக்கப்படவுள்ளது. 11 ஹிந்து கடவுள்களின் சிலைகள் கோயிலில் நிறுவப்படவுள்ளன. அரேபிய பாணியில் கோயில் கட்டுமானம் செய்யப்படவுள்ளது. இந்தக் கோயில் கட்டுவதற்கு ஹிந்துகள் மட்டுமின்றி அரபு நாட்டவா்களும் நிதியளித்துள்ளனா்.

இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதியில் கிறிஸ்தவ தேவாலயங்களும் அமைந்துள்ளன. எனவே, துபையில் பல்வேறு மதத்தினரும் சங்கமிக்கும் இடமாகவும் அப்பகுதி அமைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com