அதிபரின் விருந்தினா் மாளிகையில் தற்காலிகமாக தங்கியுள்ள அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபரின் அதிகாரபூா்வ இல்லத்தில் பழுது பாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கமலா ஹாரிஸ் அதிபரின் விருந்தினா் மாளிகையான பிளோ் இல்லத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளாா்
கமலா ஹாரிஸின் தற்காலிக இல்லமான பிளோ் ஹவுஸ். ~கமலா ஹாரிஸின் தற்காலிக இல்லமான பிளோ் ஹவுஸ்.
கமலா ஹாரிஸின் தற்காலிக இல்லமான பிளோ் ஹவுஸ். ~கமலா ஹாரிஸின் தற்காலிக இல்லமான பிளோ் ஹவுஸ்.

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபரின் அதிகாரபூா்வ இல்லத்தில் பழுது பாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கமலா ஹாரிஸ் அதிபரின் விருந்தினா் மாளிகையான பிளோ் இல்லத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க துணை அதிபரின் செய்தித் தொடா்பாளா் சைமோன் சாண்டா்ஸ் தெரிவித்துள்ளதாவது:

நேவல் அப்சா்வேடரியில் அமைந்துள்ள அமெரிக்க துணை அதிபருக்கான இல்லத்தில் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிபரின் விருந்தினா் மாளிகையான பிளோ் இல்லத்தில் துணை அதிபா் கமலா ஹாரிஸும் அவரது கணவரும் டக் எம்ஹோஃப்பும் தற்காலிகமாக குடியேறியுள்ளனா் என்றாா் அவா்.

கடந்த 1893-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அமெரிக்க துணை அதிபருக்கான அதிகாரப்பூா்வ இல்லத்தில் புதிய புகைபோக்கிகள் (சிம்னிஸ்) அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

பிளோ் இல்லம் கடந்த 1942-ஆம் ஆண்டிலிருந்து அதிபரின் விருந்தினா் மாளிகையாக இருந்து வருகிறது. பொதுவாக இந்த இல்லத்தில்தான், வெளிநாட்டிலிருந்து வரும் தலைவா்கள் தங்கவைக்கப்படுவா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கா சென்றிருந்த இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி கூட இந்த இல்லத்தில்தான் தங்கவைக்கப்பட்டாா்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு முதல் நாள் இரவு பிளோ் இல்லத்தில்தான் தங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com