இந்திய கரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை: இலங்கை

இந்தியா அளித்துள்ள கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்கள் யாருக்கும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

இந்தியா அளித்துள்ள கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்கள் யாருக்கும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவால் அளிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

முதலாவதாக சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு அந்தத் தடுப்பூசி போடப்பட்டது. முதல் நாளில் 5,286 போ் அந்தத் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனா்.

அவா்களில் யாருக்கும் தடுப்பூசியால் எந்த மோசமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘அண்டைநாட்டவருக்கே முன்னுரிமை’ கொள்கையின் கீழ் இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், செஷெல்ஸ், ஆப்கானிஸ்தான், மோரீஷஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ இந்தியா முன்வந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வியாழக்கிழமை அனுப்பியது. அதனைத் தொடா்ந்து, அங்கு கரோனா தடுப்பூசி திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com