இந்திய பயணிகளுக்கான தடையை நீக்கியது ஜெர்மனி

இந்தியா, பிரிட்டன், போர்ச்சுகல், உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் ஜெர்மன் வர இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய பயணிகளுக்கான தடையை நீக்கியது ஜெர்மனி
இந்திய பயணிகளுக்கான தடையை நீக்கியது ஜெர்மனி


பெர்லின்: இந்தியா, பிரிட்டன், போர்ச்சுகல், உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் ஜெர்மன் வர இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

உருமாறிய டெல்டா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடையை, தொற்றுப் பரவல் குறைந்து வருவதால், ஜெர்மனி தளர்த்தியுள்ளது.

ஜெர்மனியின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பிரிட்டன், போர்ச்சுக்கல், ரஷியா, இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள், அதிக அபாயமுள்ள நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், இது புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நாடுகள் அதிக அபாயமுள்ள இரண்டாம் நிலை நாடுகளின் பட்டியலுக்கு நகர்ந்துள்ளன.

கடந்த மே 23ஆம் தேதி முதல் அதிக அபாயம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் இணைக்கப்பட்டது. கடந்த வாரம் ரஷியா மற்றும் போர்ச்சுக்கல் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது அது  விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

உருமாறிய கரோனா பரவல் இருக்கும் நாடுகளுக்கு விமான சேவையை கட்டுப்படுத்திய நிலையில், அந்த நாடுகளிலிருந்து வரும் ஜெர்மன் மக்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது, கரோனா பரவல் அதிகமிருக்கும் நாடுகளிலிருந்து வருவோர், தனிமைப்படுத்துதலில் இருந்து காத்துக் கொள்ள, முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாகவோ, கரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்தவர்களாகவோ இருக்கலாம். அல்லது ஜெர்மன் நாட்டுக்கு வந்து ஐந்து நாள்களுக்குப் பின் கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று சான்றிதழ் பெறலாம் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் அபாய நாடுகளின் பட்டியலில் தற்போது பிரேசில், தென்னாப்ரிக்கா உள்பட 11 நாடுகள் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com