ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: பாகிஸ்தான் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கி இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கி இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் குழுவிடம் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மொயீத் யூசுஃப் புதன்கிழமை விளக்கமளித்தாா். அப்போது கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு காஷ்மீா் விவகாரத்தில் இழைத்த தவறுகளை சரிசெய்து பாகிஸ்தானுடனான பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு என்று அவா் கூறியதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதில் உறுதியாக உள்ள மத்திய அரசு, பாகிஸ்தானால் வன்முறை, பயங்கரவாதம், அச்சுறுத்தல் இல்லாத சூழல் ஏற்பட்டால் அந்நாட்டுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா் இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதை குறைத்துக் கொண்ட பாகிஸ்தான், இருநாட்டு வா்த்தகத்தையும் நிறுத்திக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com