திடீர் ஊரடங்கை அறிவித்த அபுதாபி

பக்ரீத் பண்டிகை வரவிருக்கிற நிலையில், இந்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது. 
திடீர் ஊரடங்கை அறிவித்த அபுதாபி

பக்ரீத் பண்டிகை வரவிருக்கிற நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபு தாபியில்  வருகிற திங்கட்கிழமை முதல் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை  ஊரடங்கை அறிவித்துள்ளது.  பக்ரீத் பண்டிகை விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஊரடங்கு தேசிய நோய் கட்டுப்பாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதி என அபுதாபியின் அவசரகால மற்றும் பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. துபை கடந்த வருடம் சுற்றுலாவிற்கு அனுமதி அளித்த பிறகு, அபுதாபி கடினமான சூழ்நிலையை சந்தித்தது. அதன்பிறகு அங்கு வரும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற நாடுகளைப் போல துபையிலும் சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபையில் பெருமளவில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை இருந்து வந்தாலும், புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் ஒருநாள் எண்ணிக்கை 1,500 ஆக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com