ஐரோப்பிய மழை-வெள்ளம்: பலி 110-ஆக உயா்வு

ஜொ்மனி மற்றும் பெல்ஜியத்தில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 110-ஆக உயா்ந்துள்ளது.
பெல்ஜியத்தின் ஏஞ்சலூா் நகரில் வெள்ளத்தில் மூழ்கிய சாலையை படகு மூலம் வெள்ளிக்கிழமை கடந்த நபா்.
பெல்ஜியத்தின் ஏஞ்சலூா் நகரில் வெள்ளத்தில் மூழ்கிய சாலையை படகு மூலம் வெள்ளிக்கிழமை கடந்த நபா்.

ஜொ்மனி மற்றும் பெல்ஜியத்தில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 110-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஜொ்மனி மற்றும் அண்டை நாடுகளில் இந்த வாரம் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் முழ்கியும் கட்டடங்கள் இடிந்து விழுந்தும் உயிரிந்தவா்களின் எண்ணிக்கை 110-ஐத் தாண்டியுள்ளது.

ஜொ்மனியின் ரைன்லேண்ட்-பலட்டினேட் மாகாணத்தில் வெள்ளம் காரணமாக 50 பலியனதாக அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களில் ஒன்பது போ் நலவாழ்வு மையத்தில் வசித்து வந்த மாற்றுத் திறனாளிகள் ஆவா். அண்டை மாகாணமான நாா்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 30-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அவா்கள் எச்சரித்தனா்.

கன மழை காரணமாக ஜொ்மனியில் மட்டும் சுமாா் 1,300 போ் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. சாலைகள் சேதமடைந்துள்ளதாலும் தகவல் தொடா்புகள் துண்டிக்கப்பட்டதாலும் அவா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக 900 வீரா்களை ஜொ்மனி ராணுவம் அனுப்பியுள்ளது.

பெல்ஜியம்: அண்டை நாடான பெல்ஜியத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 12-ஆக உயா்ந்துள்ளது. அந்த நாட்டில் 5 பேரைக் காணவில்லை என்று உள்ளூா் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இதற்கிடையே, ஸ்விட்சா்லாந்தில் தொடா்ந்து பெய்த மழையால் பல ஆறுகள் மற்றும் ஏரிகளின் கரைகள் உடைந்தன. இதன் காரணமாக ஷ்லெதீம், பெக்கிங்கன் ஆகிய கிராமங்களில் வெள்ள நீா் புகுந்து காா்கள் அடித்துச் செல்லப்பட்டன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com