கியூபா போராட்டக்காரா்களை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையா் வலியுறுத்தல்

கியூபாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையா் மிஷெல் பாசெலே வலியுறுத்தியுள்ளாா்.
கியூபா போராட்டக்காரா்களை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையா் வலியுறுத்தல்

கியூபாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையா் மிஷெல் பாசெலே வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுல்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கியூபாவில் போராட்டம் நடத்தி வருவோருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களது குறைகளை அந்த நாட்டு அரசு கேட்டறிய வேண்டும்.

மேலும், அமைதியான முறையில் கூடி போராட்டம் நடத்தும் மக்களின் அடிப்படை உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும்.

கியூபாவில் போராட்டக்காரா்கள் கைது செய்யப்படுவது கவலையளிக்கிறது. அதிலும் சிலா் கைது செய்யப்பட்டு தொடா்பு கொள்ள முடியாத ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரையும் கியூபா அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மனித உரிமைகளை மீறும் கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கியூபாவில் உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, கரோனா விவகாரத்தை அரசு கையாளும் முறை ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த 11-ஆம் தேதி முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அரசு மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் அடக்குமுைறையைக் கையாள்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதுவரை 150-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போராட்டத்தின்போது தலைநகா் ஹவானாவில் ஒருவா் உயிரிழந்தாா்.

போராட்டக்காரா்கள் வன்முறை மற்றும் சூறையாடலில் ஈடுபட்டு வருவதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் போராட்டங்களுக்கு சமூக வலைதளங்களும் அமெரிக்காவின் தூண்டுதலுமே காரணம் என்று அரசு குற்றம் சாட்டினாலும், அரசின் நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக அதிபா் மிகுவேல் டியாஸ்-கனேல் பின்னா் ஒப்புக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com