மீண்டும் கரோனா அச்சம்: தனிமைப்படுத்திக்கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

சக அமைச்சருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பணியில் இல்லாதபோது தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் கரோனா அச்சம்: தனிமைப்படுத்திக்கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

சக அமைச்சருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பணியில் இல்லாதபோது தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் டெல்டா வகை கரோனா வேகமாக பரவி வருகிறது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு நேற்று (சனிக்கிழமை) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமைச்சருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் நிதியமைச்சர் ரிஷி சுனக்கும் பணியில் இல்லாதபோது தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, பிரிட்டன் சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 10 நாள்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

பிரிட்டனில் புதிய அலையின் மூலம் கரோனா பரவி வரும் நிலையிலும் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் நாளை முதல் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com