வானில் மிதக்கும் விடியோவை வெளியிட்ட ஜெஃப் பெசோஸ்

விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் வானில் மிதக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

நிலவில் மனிதன் சென்று வந்ததன் 52-ம் ஆண்டை கொண்டாடும் விதமாக விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல புளு ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று மாலை நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. 

அதன்படி, அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க்பெசோஸ், 82 வயதான மூதாட்டி வாலிஃபங்க் உள்பட 4 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். சுமார் 11 நிமிடங்கள் விண்ணில் இருந்த பிறகு பாராஷீட் வாயிலாக நான்கு பேரும் பூமிக்குத் திரும்பினர்.

இந்நிலையில் விண்வெளிக்கு சென்ற ஜெஃப் பெசோஸ் வானில் விண்கலத்திற்குள் மிதந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com