அமெரிக்காவில் காட்டுத் தீ: மீட்பு பணி தீவிரம்

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகிறது.
அமெரிக்காவில் காட்டுத் தீ: மீட்பு பணி தீவிரம்

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகிறது. இடியுடன் கூடிய கன மழையுடன் மின்னல் தாக்கிவரும் நிலையில், காட்டு தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஃப்ரீமாண்ட்-வினேமா தேசிய காட்டில் போர்ட்லாந்திலிருந்து தென்கிழக்கில் 300 மைல்கள் வரை காட்டுத் தீ சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை ஒப்பிடுகையில் சிறிய அளவில்தான் பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. 

தீவிரமான வானிலை காரணமாக நாளுக்கு நாள் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. காட்டுத் தீ மேலும் பரவும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்தும் வகையில் மீட்புப் படையினரிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது. ஆர்கன்சாஸ், நெவாடா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 2,000 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 5,000 வீடுகள் அபாயத்தில் உள்ளது. ஏற்கனவே, 70 வீடுகள் மற்றும் 100 கட்டிடங்கள் தீயில் சிக்கி சேதமடைந்துள்ளது. உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை எனக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com