சர்வதேச விண்வெளி நிலையத்தின் பகுதியுடன் இணைந்த டிராகன் விண்கலம்(விடியோ)

ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் புதன்கிழமை அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியுடன் இணைந்தது. 
சர்வதேச விண்வெளி நிலையத்தின் பகுதியுடன் இணைந்த டிராகன் விண்கலம்(விடியோ)

ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் புதன்கிழமை அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியுடன் இணைந்தது. 

உள்ளூர் நேரப்படி காலை 6:45 மணிக்கு  சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மோனி தொகுதியின் முன்பகுதியில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் காலை 7:35 மணிக்கு விண்வெளியை நோக்கிய மற்றொரு பகுதியுடன் இணைந்தது. இந்த குழு இரண்டாவது முறையாக பகுதி மாற்றும் சோதனையை நிறைவு செய்துள்ளது. 

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலமாக தேவையான பொருள்களையும் விண்வெளி வீரர்களையும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா அனுப்பி வருகிறது. தற்போது விண்வெளியில் உள்ள வீரர்கள் நவம்பர் தொடக்கத்தில் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com