‘பொய் சொல்லாதீர்கள்’: பிரேசில் அதிபரின் விடியோவை நீக்கிய யூடியூப்

கரோனா தொற்று தொடர்பாக தவறான தகவலைத் தெரிவித்ததாக பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவின் விடியோவை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.
‘பொய் சொல்லாதீர்கள்’: பிரேசில் அதிபரின் விடியோவை நீக்கிய யூடியூப்

கரோனா தொற்று தொடர்பாக தவறான தகவலைத் தெரிவித்ததாக பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவின் விடியோவை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.

கரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து அதுகுறித்து பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா ஆரம்பித்தன. அதிகாரப்பூர்வமற்ற அறிவியலுக்கு புறம்பான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அதன்படி கரோனா தொடர்பாக பல்வேறு நாடுகளின் முக்கியப் பிரமுகர்களும் கூட ஆதாரமற்ற தகவல்களை பகிரும் நிலையில் தவறான தகவல்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தானது கரோனா பாதிப்பை தடுக்கவல்லது என பிரேசில் அதிபர் பேசிய விடியோவை யூடியூப் தளத்தின் விதிகளுக்கு எதிராக அவரின் விடியோ இருப்பதாகக் கூறி அந்நிறுவனம் நீக்கியுள்ளது. 
 
மேலும் அவரது விடியோவில் முகக்கவசங்களால் கரோனாவைத் தடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கரோனாவை கையாண்டது தொடர்பாக பிரேசில் அதிபருக்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில் அவர்மீது அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com