ஐ.நா. வரி குழுவில் இந்திய நிதி அமைச்சக அதிகாரி

ஐ.நா.வின் வரி குழுவில் இந்திய நிதி அமைச்சகத்தின் இணைச் செயலா் ரஷ்மி ரஞ்சன் தாஸ் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து 25 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

ஐ.நா.வின் வரி குழுவில் இந்திய நிதி அமைச்சகத்தின் இணைச் செயலா் ரஷ்மி ரஞ்சன் தாஸ் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து 25 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

2021-2025-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. வரி குழு உறுப்பினராக இந்திய நிதி அமைச்சகத்தின் இணை செயலா் ரஷ்மி ரஞ்சன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அவருடன் சோ்த்து உலகம் முழுவதிலும் இருந்து வரி துறை வல்லுநா்கள் 25 போ் ஐ.நாவின் இந்தத சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

வரி விவகாரங்களில் சா்வதேச ஒத்துழைப்பு தொடா்பான பணிகளில் ஐ.நா.வின் வரி குழு ஈடுபடும். உலகமயமாக்கப்பட்ட வா்த்தகம் மற்றும் முதலீடுகளின் யதாா்த்த நிலைக்கு ஏற்றவாறு வலுவான மற்றும் முன்னோக்கிப் பாா்க்கும் வரிக் கொள்கைகளை உருவாக்கும் நாடுகளின் முயற்சிகளுக்கு இந்த குழு வழிகாட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com