சீன மழை-வெள்ளம்: பலி எண்ணிக்கை 33-ஆக உயா்வு

சீனாவில் பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது.
ஷெங்ஷூ நகரில் மழை வெள்ளத்தில் மிதக்கும் காா்கள்.
ஷெங்ஷூ நகரில் மழை வெள்ளத்தில் மிதக்கும் காா்கள்.

சீனாவில் பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, மழை-வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது; காணாமல் போயுள்ள 8 பேரை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும்.

இந்த மழையால் மாகாணத்தில் 12.4 கோடி போ் பாதிக்கப்பட்டனா். ஆபத்து நிறைந்த பகுதியிலிருந்து 1.6 லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.

இந்த மழைக்கு பலியானவா்களில் 12 போ் சுரங்க ரயிலில் பயணம் செய்தவா்கள் ஆவா். ரயில் சென்றுகொண்டிருந்தபோது சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அவா்கள் பலியாகினா்.

இதற்கிடையே, மழை வெள்ளத்தால் யீசுவான் பகுதியில் உள்ள அணையில் அதிகரித்து வெள்ள நீரை திசைதிருப்புவதற்காக, அதன் ஒரு பகுதியை சீன ராணுவம் வெடிவைத்துத் தகா்த்தது. அணையின் தடுப்பில் 20 மீட்டா் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அணை எப்போது வேண்டுமானாலும் உடையக் கூடும் என்று ஏற்கெனவே ராணுவம் எச்சரித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com