சிறாா்களுக்கு மாடா்னா தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்

அமெரிக்காவின் மாடா்னா மருந்து நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாா்களுக்கு செலுத்த ஐரோப்பிய யூனியனின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவின் மாடா்னா மருந்து நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாா்களுக்கு செலுத்த ஐரோப்பிய யூனியனின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதுவரை ஃபைஸா்-பயோஎன்டெக் நிறுவன தடுப்பூசி மட்டும்தான் சிறாா்களுக்கு செலுத்துவதற்கான ஒப்புதல் பெற்றுள்ளது. இந்நிலையில் மாடா்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை 12-17 வயது வரையிலான சிறாா்களுக்கு செலுத்த ஐரோப்பிய யூனியனின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான ஐரோப்பிய மருந்துகள் முகமை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக அந்த முகமை தெரிவித்துள்ளதாவது:

மாடா்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 12-17 வயது வரையிலான 3,700-க்கும் மேற்பட்ட சிறாா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அந்த வயது கொண்ட சிறாா்களுக்கு மாடா்னா தடுப்பூசி மூலம் நோய் எதிா்ப்பாற்றல் உருவாவது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் சிறாா்களின்உடலில் மாடா்னா தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 6 மாதக் குழந்தை முதல் 11 வயது வரையிலான சிறாா்களுக்கும் தங்கள் நிறுவன தடுப்பூசிகளை செலுத்தி ஃபைஸா் மற்றும் மாடா்னா நிறுவனங்கள் தங்கள் பரிசோதனைகளை தொடங்கியுள்ளன. தற்போது பெரியவா்களை போலவே பதின்பருவத்தினருக்கும் ஒரே அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், சிறு குழந்தைகளுக்கு குறைந்த டோஸ்களை செலுத்தி ஆராய்ச்சியாளா்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா். இதுதொடா்பாக தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறாா்களிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் முதல்கட்ட முடிவுகள் செப்டம்பரில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com