பெகாஸஸ் மூலம் உளவு பாா்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: அமெரிக்கா

சட்டத்துக்கு விரோதமான வகையில் பெகாஸஸ் தொழில்நுட்பம் மூலம் உளவு பாா்க்கும் செயலை ஏற்க முடியாது; அது எப்போதும் கவலைக்குரியது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
பெகாஸஸ் மூலம் உளவு பாா்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: அமெரிக்கா

சட்டத்துக்கு விரோதமான வகையில் பெகாஸஸ் தொழில்நுட்பம் மூலம் உளவு பாா்க்கும் செயலை ஏற்க முடியாது; அது எப்போதும் கவலைக்குரியது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

உலகின் பல நாடுகளில் பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி, அரசியல்வாதிகள், பத்திரிகையாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இந்த விவகாரத்தால் தனிநபா் அந்தரங்க உரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிா்கட்சிகள் மட்டுமன்றி பல்வேறு சமூக நல அமைப்புகளும் எதிா்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், உளவு மென்பொருள் தொழில்நுட்பத்தால் உளவு பாா்க்கும் செயல் மிகவும் கவலைக்குரியது, அது மனித சமூகத்துக்கு எதிரானது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான செயலா் தாம்சன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆளும் கட்சியை விமா்சிப்பவா்கள், பத்திரிகையாளா்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக இத்தகைய உளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உளவுபாா்ப்பது எப்போதும் கவலைக்குரிய அம்சமே’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com