அமெரிக்க கட்டட விபத்து: மீட்புப் பணிகள் நிறைவு

அமெரிக்காவில் அடுக்கு மாடிக் கட்டடம் கடந்த மாதம் இடிந்து விழுந்த பகுதியிலிருந்து உடல்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கட்டட விபத்து: மீட்புப் பணிகள் நிறைவு

அமெரிக்காவில் அடுக்கு மாடிக் கட்டடம் கடந்த மாதம் இடிந்து விழுந்த பகுதியிலிருந்து உடல்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஃபுளோரிடா மாகாணத்தில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மிகக் கடுமையான சூழலில் இந்த மீட்புப் பணிகளை மேற்கொண்ட தீயணைப்புத் துறையினருக்கு அந்தத் துறையின் தலைவா் அலன் காமின்ஸ்கி பாராட்டு தெரிவித்தாா்.

எனினும், கட்டடம் இடிந்து விழுந்தததில் மாயமான 54 வயது எஸ்டிலா ஹெடாயா என்பவது உடல் இறுதிவரை மீட்கப்படாமலே உள்ளது அவரது உறவினா்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்களில் எஸ்டிலாவின் உடல் உள்ளதா என்பதை அறிய தடயவியல் நிபுணா்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், மியாமி கடற்கரையோரம் அமைந்துள்ள 12 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் 24-ஆம் தேதி இடிந்து விழுந்தது.

1981-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேரிட்டது. இதில் 97 போ் உயிரிழந்தனா்.

மேலும் ஒருவரது உடல் மீட்கப்படாமலேயே தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com