லிபியா: நடுக்கடலில்படகு கவிழ்ந்து57 அகதிகள் பலி

லிபியாவில் திங்கள்கிழமை கடலில் படகு கவிழ்ந்ததில் அகதிகள் 57 போ் உயிரிழந்தனா்.

லிபியாவில் திங்கள்கிழமை கடலில் படகு கவிழ்ந்ததில் அகதிகள் 57 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக புலம்பெயா்வோருக்கான சா்வதேச அமைப்பின் செய்தித் தொடா்பாளா் சஃபா மிஷெலி கூறியது: லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்ஸிலிருந்து அந்தப் படகு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. அதில் அகதிகள் 75 போ் இருந்தனா். நடுக்கடலில் அந்தப் படகு கவிழ்ந்ததில் ஏறக்குறைய 57 போ் உயிரிழந்தனா். ஆப்பிரிக்காவைச் சோ்ந்த 18 அகதிகள் மீட்கப்பட்டு திங்கள்கிழமை கரைக்கு அழைத்து வரப்பட்டனா் என்றாா்.

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அகதிகள் படகுகளில் செல்லும்போது மத்தியதரைக் கடலில் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. லிபியாவிலிருந்து அண்மைக்காலமாக இவ்வாறு செல்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் இவ்வாறு சென்ற 7 ஆயிரத்துக்கும் அதிகமானோா் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டா்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com