செத்து மடியும் ஆயிரக்கணக்கான மீன்கள்: தண்ணீரின் தன்மை மாறுவதால் ஏற்படும் அபாயம்

தண்ணீரின் தன்மை மாறி அசாதாரணமான சூழல் நிலவிவரும் நிலையில், கலிபோர்னியாவில் சால்மன் வகை மீன்களின் இனபெருக்கம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தண்ணீரின் தன்மை மாறி அசாதாரணமான சூழல் நிலவிவரும் நிலையில், கலிபோர்னியாவில் சால்மன் வகை மீன்களின் இனபெருக்கம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கலிபோர்னியாவில் வறட்சி நிலவிவரும் நிலையில், கிளமத் ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதனால், லட்சக்கணக்கான சால்மன் வகை மீன்கள் செத்து மடிந்துள்ளது. இதன் காரணமாக, இந்த மீன்களை உண்டு வாழும் அமெரிக்க பழங்குடியினர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சேக்ரமெண்டோ ஆற்றில் தண்ணீரின் தன்மை மாறி அசாதாரணமான வெப்பம் நிலவிவருவதால் இளம் சினூக் சால்மன் மீன்கள் இறந்துவருவதாக வனத்துறை அலுவலர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். காலநிலை மாறிவருவதால் மாகாணத்தின் மேற்கு பகுதிகளின் வெப்பம் அதிகரித்து வறட்சி நிலவிவருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. 

குறிப்பாக, ஒரு வயது சால்மன் மீன்கள் பாதிப்புக்குள்ளானால் அதன் மொத்த இனப்பெருக்கத்தில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது மீன்பிடித் தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. கலிபோர்னியாவில் மட்டும் 1.4 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகி்றது.

மழைக்காலத்தில் சேக்ரமெண்டோ ஆற்றில் பிறக்கும் சினூக் சால்மன் மீன்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து பசிபிக் பெருங்கடலை அடைகிறது. அங்கு மூன்றாண்டு காலம் வாழும் மீன்கள், பின்னர் இனப்பெருக்கத்திற்காக பிறந்த இடங்களுக்கு ஏப்ரல் ஆகஸ்ட் மாதங்கள் திரும்புகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com