பெகாஸஸ் நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேல் விசாரணை

பெகாஸஸ் விவகாரத்தில் என்எஸ்ஒ நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேலில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெகாஸஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நி்லையில், மென்பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் அதனை தயாரித்த என்எஸ்ஒ நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேலில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

என்எஸ்ஒ நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்ற அரசு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பல அமைப்புகளின் பிரதிநிதிகள் என்எஸ்ஒ நிறுவனத்தின் அலுவகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்" என்றார்.

மேலும் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியுமா? என பிடிஐ செய்தியாளர் கேட்டதற்கு, தற்போதைக்கு பெகாஸ்ஸ குறித்த தகவல்களை விரிவாக கூற முடியாது என செய்தித் தொடர்பாளர் பதிலளித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பிரிவு விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தேவைப்படும் பட்சத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பு விசாரணை மேற்கொள்ளும் என்றும் உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பிரிவு விதித்த வீதிகளை என்எஸ்ஒ நிறுவனம் பின்பற்றியுள்ளதா என்பது விசாரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இருந்ததாக வெளியான செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இஸ்ரேல் பாதுகாப்புதுறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்டதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு உறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com