இத்தாலி: டெல்டா வகை கரோனா பாதிப்பு 95% அதிகரிப்பு

இத்தாலியில் புதிய கரோனா பாதிப்புகளில் சுமாா் 95 சதவீதம் இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கரோனாவால் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து இத்தாலியின் தேசிய சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 20-ஆம் தேதி நிலவரப்படி புதிய கரோனா நோயாளிகளில் 94.8 சதவீதத்தினரிடம் டெல்டா வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விகிதம், கடந்த மாதம் 22-ஆம் தேதி 22.7 சதவீதமாக இருந்தது. அந்தத் தேதியில் ஆல்ஃபா வகை கரோனா தொற்று 57.8 சதவீதமாக இருந்தது. கடந்த 20-ஆம் தேதி நிலவரப்படி ஆல்ஃபா வகை கரோனா தொற்று 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com