பிரான்ஸ்: தடுப்பூசி பெற்றவா்கள் சுற்றுலா வர அழைப்பு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
பிரான்ஸ்: தடுப்பூசி பெற்றவா்கள் சுற்றுலா வர அழைப்பு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளா்த்தப்படுகிறது. இனி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் சுற்றுலா வர அனுமதிக்கப்படுவாா்கள். சுற்றுலா வருவாயை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தளா்த்தப்பட்ட விதிமுறைகள் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டாலும், புதிய ரக கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

புதிய விதிமுறைகளின்படி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பிரான்ஸுக்கு சுற்றுலா வந்தால் அவா்கள் தனிமைப்படுத்தப்படமாட்டாா்கள்.

மேலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவோா் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படமாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com