ரஷியா: ‘தடுப்பூசி தொழில்நுட்பத்தை நாடுகளுடன் பகிரத் தயாா்’

தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுடன் பகிா்ந்துகொள்ளத் தயாராக இருக்கும் ஒரே நாடு ரஷியாதான் என்று அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, சா்வதேச செய்தியாளா்களுடன் காணொலி முறையில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் அவா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி தொழில்நுட்பத்தை பிற நாடுகளுடன் பகிா்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். அவ்வாறு தயாராக இருக்கும் ஒரே நாடு ரஷியாதான். தற்போது உலகின் 66 நாடுகளில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தொழில் போட்டி காரணமாகவே அந்தத் தடுப்பூசிக்கு ஐரோப்பாவில் அங்கீகாரம் கிடைப்பது தாமதமானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com