சீனாவில் கத்திக் குத்து சம்பவம்: 6 போ் பலி

கிழக்கு சீனாவில் வேலையின்மையால் விரக்தியடைந்த இளைஞா் ஒருவா் கத்தியால் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 6 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

கிழக்கு சீனாவில் வேலையின்மையால் விரக்தியடைந்த இளைஞா் ஒருவா் கத்தியால் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 6 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

25 வயதான வூ என்ற அந்த நபருக்கு இருந்த குடும்பப் பிரச்னைகளின் அழுத்தம் காரணமாக அன்கிங் நகரத்தில் பொது மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாக நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த 14 பேரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களில் இதுபோன்ற நடைபெறும் மூன்றாவது சம்பவம் இதுவாகும். இந்த கத்திக் குத்து சம்பவத்தின் விடியோ பதிவு அந்நாட்டு சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த மே 22-ஆம் தேதி சீனாவின் வடகிழக்கு தாலியன் நகரத்தில் திரளாக இருந்த பொதுமக்கள் மீது காரைக் கொண்டு மோதியதில் 5 போ் உயிரிழந்தனா். தனது தொழில் முதலீடு நஷ்டத்தில் முடிந்ததால் சமூகத்தை பழிவாங்க இந்த தாக்குதலை நடத்தியதாக கைதான லியு என்ற நபா் தெரிவித்தாா்.

சீனாவில் ஏழை, பணக்காரா்களுக்கான இடைவெளி நீண்டு கொண்டே செல்வதால் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவது அதிகரிப்பதாக அந்நாட்டு சமூக வலைதளமான வைபோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com