ஐ.நா. பொதுச்சபை தலைவராக மாலத்தீவு அமைச்சர் தேர்வு

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 2021-22 ஆம் ஆண்டிற்கானத் தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் தேர்வாகியுள்ளார்.
மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித்
மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 2021-22 ஆம் ஆண்டிற்கானத் தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் தேர்வாகியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை தலைவர் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பொதுச்சபை தலைவராகும் வாய்ப்பு ஆசிய - பசுபிக் பிராந்தியத்திற்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் பொதுச்சபை தலைவருக்கான தேர்தலில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மே ரசூலும், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித்தும் போட்டியிட்டனர். இதில் அப்துல்லா சாகித் 143 வாக்குகளும், சல்மே ரசூல் 48 வாக்குகளும் பெற்றனர்.

இதனையடுத்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் ஐ.நா. பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com