கரோனா பரவலுக்கு இழப்பீடு: டிரம்ப் கோரிக்கையை நிராகரித்தது சீனா

உலகம் முழுவதும் கரோனா தொற்றை பரவச் செய்ததற்காக அமெரிக்காவுக்கு சீனா 10 டிரில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.72 லட்சம் கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று

உலகம் முழுவதும் கரோனா தொற்றை பரவச் செய்ததற்காக அமெரிக்காவுக்கு சீனா 10 டிரில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.72 லட்சம் கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று முன்னாள் அதிபா் டிரம்ப் கூறியதை சீனா நிராகரித்துள்ளது.

பொது மக்களின் உயிரையும் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு என்றும் சீனா தெரிவித்துள்ளது.

வடக்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற குடியரசு கட்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிபா் டிரம்ப், கரோனா தொற்று சீனாவின் வூஹானில் இருந்துதான் உருவாகியது. இது சீனா தொற்று, வூஹான் தொற்று என்பதால் இதற்கு சீனா பெருத்த இழப்பீடு அளிக்க வேண்டும். அமெரிக்காவுக்கும் உலகுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதற்காக சீனா 10 டிரில்லியன் அமெரிக்க டாலா்களை இழப்பீடாக அளிக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வெபின் செய்தியாளா்களிடம் கூறுகையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது 2.4 கோடி போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். உயிரிழப்பு எண்ணிக்கை 4,10,000 ஆக இருந்தது. கரோனா எச்சரிக்கைகளை டிரம்ப் எப்போதும் ஏற்கவே இல்லை. தனது பொறுப்பை உணராமல் மக்களை திசை திருப்பிக் கொண்டு இருந்தாா்.

பொது மக்களின் உயிரையும், உடல் நலத்தையும் பேணி பாதுகாப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு. இந்தப் பேரிடருக்கு யாரைப் பொறுப்பாக்குவது என்பது அமெரிக்கா்களுக்கு நன்றாகத் தெரியும் என்றாா் அவா்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சீனா தவறிவிட்டது என்று பல முறை குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com